கோலாலம்பூர், மார்ச்.18-
சர்சைக்குரிய சமயப் போதகர் சாகீர் நாயிக்கிற்கு மலேசிய குடியுரிமை கிடைக்கப் பெற்றதாகக் கூறப்படுவதை உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுஃடின் நசுத்தியோன் இஸ்மாயில் மறுத்துள்ளார்.
அதேவேளையில் பெர்காசா கட்சியின் முன்னாள் தலைவர் இப்ராஹிம் அலியிடம் இருந்து சாகீர் நாயிக் விருதுப் பெறுவதைப் போல சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள படம், 6 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டதாகவும் என்று சைபுஃடின் விளக்கினார்.
அந்த விருதுக்கும், குடியுரிமைக்கும் எந்தவொரு தொடர்புமில்லை. இஸ்லாத்தின் மேன்மைக்காக சாகீர் நாயிக் ஆற்றிய பங்களிப்புக்காக பெர்காசா கட்சியின் முன்னாள் தலைவர் அந்த விருதை வழங்கியிருக்கலாம் என்று சைபுஃடின் குறிப்பிட்டார்.
அரசியல் நோக்கத்திற்காக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ள அந்த தகவல் பொய்யானதாகும் என்று அவர் மேலும் கூறினார்.