மாதுவின் மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்டுக் கொன்றதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

பத்து பஹாட், மார்ச்.19-

மூன்று பிள்ளைகளுக்குத் தாயாரான மாது ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி, தீயிட்டுக் கொன்றதாக ஆடவர் ஒருவர் ஜோகூர், பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார். 29 வயது முகமட் பிஃர்டாவுஸ் பக்தேஹெர் என்ற அந்த இளைஞர், மாஜிஸ்திரேட் அருண் நோவல் தாஸ் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

இவ்வழக்கு குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் கொலைக் குற்றச்சாட்டாக வகை செய்யப்பட்டு உயர் நீதிமன்றத்திற்கு கொண்டுச் செல்லப்படுவதால் அந்த இளைஞரிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த மார்ச் 8 ஆம் தேதி மாலை 5 மணியளவில் கம்போங் பாரு, ஶ்ரீ காடிங்கில் 31 வயது ஷாரா நுருல் மஸ்தூரா அப்துல்லா என்ற மாதுவை உயிரோடு கொளுத்தியதாக அந்த நபருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS