பெண்டாங், மார்ச்.19-
நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட கோர விபத்தில் மூவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமுற்றனர். இச்சம்பவம் இன்று அதிகாலை 3.24 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலை, 58.4 ஆவது கிலோமீட்டர் , கெடா, பெண்டாங் அருகில் நிகழ்ந்தது.
ஒரு புரோட்டோன் சாகா BLM ரக கார், ஒரு 4 Wheel Drive வாகனம் மற்றும் இரண்டு லோரிகள் இந்த விபத்தில் சம்பந்தப்பட்டு இருந்ததாக பெண்டாங் தீயணைப்பு, மீட்புப்படை நிலையத் தலைவர் சுல்கிப்ளி மானாவ் தெரிவித்தார்.
உயிரிந்தவர்களின் உடல்களை வாகனத்தின் இடிப்பாடுகளிலிருந்து மீட்பதற்கு தீயணைப்புப் படையினர், பிரத்தியேக சாதனங்களைப் பயன்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.