புத்ராஜெயா, மார்ச்.19-
தனக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறை, இரண்டு பிரம்படித் தண்டனை மற்றும் 10 மில்லியன் ரிங்கிட் அபராதத் தொகை மீதான தீர்ப்பை ரத்து செய்யக் கோரி, மூவார் எம்.பி. சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் செய்து கொண்ட மேல்முறையீடு மீதான விசாரணை, புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றத்தில் இன்று காலையில் தொடங்கியது.
நம்பிக்கை மோசடி குற்றத்திற்காக தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து முடிவெடுக்கும் பொறுப்பை, 110 விழுக்காடு இறைவனிடமே விட்டு விடுவதாக செய்தியாளர்களிடம் பேசுகையில் 33 வயதுடைய சையிட் சாடிக் தெரிவித்தார். இந்த மேல்முறையீட்டில் உண்மை வெல்லும், நீதி நிலைநாட்டப்படும் என்று மூடா கட்சியின் முன்னாள் தலைவரான சையிட் சாடிக் நம்பிக்கைத் தெரிவித்தார்.