இஸ்மாயில் சப்ரியிடம் 20 மணி நேரத்திற்கு மேல் விசாரணை

புத்ராஜெயா, மார்ச்.19-

லஞ்ச ஊழல் மற்றும் சட்டவிரோதப் பணம் மாற்றம் தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரியிடம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் இதுவரையில் 20 மணி நேரத்திற்கு அதிகமாக விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த ஆணையம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இஸ்மாயில் சப்ரியிடம் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் விசாரணை இன்று நான்காவது நாளை எட்டியுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

கடந்த மார்ச் 13 ஆம் தேதி முதல் முறையாக எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் காணப்பட்ட இஸ்மாயில் சப்ரியிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மறுநாள் மார்ச் 14 ஆம் தேதி 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மார்ச் 17 ஆம் தேதி திங்கட்கிழமை 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக எஸ்பிஆர்எம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அவருக்கு எதிரான விசாணை நாளை மார்ச் 20 ஆம் தேதி வியாழக்கிழமை காலையில் தொடரும் என்று அந்த ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS