புதிய ஆளுநர் வேட்பாளர் பெயர் பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைப்பு

ஜார்ஜ்டவுன், மார்ச்.19-

பினாங்கு மாநிலத்தின் புதிய ஆளுநர் பதவிக்கான வேட்பாளர்கள் பெயர் பட்டியல் பரிசீலனைக்காக பிரதமர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விட்டதாக மாநில முதலமைச்சர் சோவ் கோன் யோவ் தெரிவித்துள்ளார்.

தற்போது பினாங்கு ஆளுநராக பதவி வகித்து வரும் துன் அஹ்மாட் புஃஸி அப்துல் ரசாக் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்பதால் புதிய ஆளுநர் பதவிக்கு சிலரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக சோவ் கோன் யோவ் தெரிவித்தார்.

பினாங்கு ஆளுநர் பதவி என்பது மாமன்னரால் நியமிக்கப்படக்கூடியதாகும். அப்பதவிக்கு நியமிக்கப்படக்கூடியவர் நான்கு ஆண்டுகள் உள்ளடக்கிய ஒரு தவணைக் காலம் அப்பொறுப்பில் இருப்பார்.

ஆளுநர் பதவிக்கு யாரைத் தேர்வு செய்வது என்பது மாமன்னரின் விவேகத்திற்கு உட்பட்டதாகும். நடப்பில் உள்ளவரின் பதவிக் காலம் நீடிக்கப்படவில்லை என்றால் புதிய நியமனம் அவசியமாகிறது. அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதாகும் என்று சோவ் கோன் யோவ் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS