கோலாலம்பூர், மார்ச்.19-
மலேசிய ஊடகவியல் மன்ற சட்ட மசோதா 2024, மேலவையில் நிறைவேற்றப்பட்டது. மேலவையில் தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நீ சிங்கினால் இரண்டாவது வாசிப்புக்கு விடப்பட்ட மலேசிய ஊடகவியல் மன்ற சட்ட மசோதா 2024 மீதான விவாதத்தில் 17 செனட்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்த சட்ட மசோதா, பெரும்பான்மை வாக்குகளில் நிறைவேற்றப்பட்டதாக தியோ நீ சிங் குறிப்பிட்டார். புதிய கருப்பொருளின் மூலம் அரசாங்கம்அனைத்து ஊடகங்களையும் ஒன்றிணைக்க விரும்புகிறது. இதன் மூலம் அவர்களால் மக்களுக்கு தகவல்களைப் பரப்புவதில் அரசாங்கத்திற்கு கூட்டாக உதவ முடியும் என்று விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில் தியோ மேற்கண்டவாறு கூறினார்.
செய்தித்தாள்களின் உரிமையாளர்கள் என்ற வார்த்தையை * ஊடக அமைப்புகள்* என்று மாற்றுவதே இந்த சட்டத் திருத்தத்தின் முக்கிய நோக்கமாகும் என்று துணை அமைச்சர் விளக்கினார்.
கடந்த 1967 ஆம் ஆண்டு பெர்னாமா சட்டம் இயற்றப்பட்டதிலிருந்து முதல் முதலில் கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்த மசோதா இதுவாகும்.