குவாந்தான், மார்ச்.20-
ரவூப், செரோவில் உள்ள கம்போங் கோல செமந்தானில் இன்று அதிகாலை வீடு ஒன்று தீப்பிடித்ததில் ஆடவர் ஒருவர் கருகி இறந்து கிடந்தார். தனியாக வசித்து வந்த 50 வயதான ஸாஹாரி இப்ராஹிம், தீப்பிடித்ததில் அங்கிருந்து தப்பிக்க முடியாமல் போனார் என்று நம்பப்படுகிறது.
வீடு தீயில் முற்றிலும் எரிந்து சாம்பலானது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த பிறகு, சேதமடைந்த வீட்டிற்குள் அந்த ஆடவர் கருகி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பகாங் மலேசிய தீயணைப்பு – மீட்புத் துறையின் பொதுத் தொடர்பு அதிகாரி ஸுல்பஃட்லி ஸாகாரியா கூறினார். இறந்தவரின் உடல் அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காகக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.