புத்ராஜெயா, மார்ச்.20-
இன்று முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி யாகோப்பை ஆறாவது முறையாக விசாரித்தது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம். Bera நாடாளுமன்ற உறுப்பினரான இஸ்மாயில் சப்ரி, காலை 9.54 மணிக்கு எஸ்பிஆர்எம் தலைமையகத்தை வந்தடைந்தார். ஊழல் தடுப்பு ஆணையம், இதற்கு முன்னர் நான்கு முன்னாள் மூத்த அதிகாரிகள் மீதான விசாரணையில் முன்னாள் பிரதமரை சந்தேக நபராக விசாரித்து வருவதாக அறிவித்திருந்தது.