பெட்டாலிங் ஜெயா, மார்ச்.20-
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் குழந்தைகளின் பராமரிப்புக்கான வரி விலக்கு விகிதத்தை மூவாயிரம் ரிங்கிட்டில் இருந்து ஐந்தாயிரமாக உயர்த்த வேண்டும் என்று அரசாங்கத்திற்கு மலேசிய குழந்தைகள் பராமரிப்பு மையங்களின் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குடும்பங்களின் சுமையைக் குறைக்க உதவும் என அதன் தலைவர் சைமன் ங் குறிப்பிட்டார்.
சமூக நலத்துறை (JKM) இல் பதிவு செய்யப்பட்ட பராமரிப்பு மையங்களில் 7 முதல் 18 வயதுடைய தனிநபர்களின் பராமரிப்புக்கும் வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும். தற்போதைய வரி விலக்கு, ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பதிவு செய்யப்பட்ட பராமரிப்பு மையங்கள், மழலையர் பள்ளிகள் ஆகியவற்றுக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என அவர் சுட்டிக் காட்டினார்.