சிறந்த கழிப்பறை விருது – ஆண்டு நிகழ்வாக மாற்றப்படும்

கோலாலம்பூர், மார்ச்.20-

பொது கழிப்பறைகளின் தூய்மையைப் பராமரிப்பதில் குடிமை உணர்வை ஊக்குவிக்கும் வகையில், சிறந்த கழிப்பறை விருது – TOTYA தேசிய நிலையிலான ஆண்டு நிகழ்வாக மாற்றப்படும். இது அமைச்சரவையால் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார் வீடமைப்பு, ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சர் ஙா கோர் மிங்.

ஊராட்சி மன்றம், நெடுஞ்சாலையில் இருக்கும் ஓய்வெடுக்கும் R & R பகுதி, தங்கும் விடுதிகள், உணவகங்கள், பேரங்காடிகள், பள்ளிகள், உணவு மையங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகிய எட்டு பிரிவுகளில் இந்த ஆண்டு, TOTYA போட்டி நடத்தப்படும். இந்த போட்டி மூன்றாவது ஆண்டாக நடைபெறுகிறது. மேலும் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட் ரொக்கப் பரிசு வழங்கப்பட இருக்கிறது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் வெற்றியாளர் 20 ஆயிரம் ரிங்கிட்டைப் பெறுவார். 2026 மலேசியாவுக்கு வருகை புரியும் ஆண்டை முன்னிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட சுற்றுலா தலங்களில் ஆறு நட்சத்திர ஸ்மார்ட் கழிப்பறைகள் ஆறினைக் கட்ட தமது அமைச்சு நான்கு மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்துள்ளது எனவும் ஙா கோர் மிங் கூறினார்.

WATCH OUR LATEST NEWS