தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர். விடாமுயற்சி படத்தை தொடர்ந்து இப்படத்திலும் நடிகை த்ரிஷா கதாநாயகியாக அஜித்துடன் நடித்துள்ளார்.
சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, இரண்டு தினங்களுக்கு முன் இந்த படத்தின் முதல் பாடலான ஓ.ஜி. சம்வம் வெளியானது.
குட் பேட் அக்லி படத்தில் வில்லன் கதாபத்திரத்தில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில், நடிகர் ரகுராம் தான் குட் பேட் அக்லி படத்தில் வில்லன் ரோலில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ரகுராம் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தில் வில்லன் கும்பலைச் சேர்ந்த இரட்டையர்களில் ஒருவராக நடித்தது குறிப்பிடத்தக்கது.