சார்பட்டா பரம்பரை 2 கைவிடப்பட்டதா?

நடிகர் ஆர்யா நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம்தான் சார்பட்டா பரம்பரை. ஆங்கில குத்துச் மையமாக வைத்து வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் பசுபதி, துஷாரா விஜயன், கலையரசன், சபீர், ஜான் கொக்கென் ஆகியோரும் நடித்திருந்தனர். இப்படத்தை இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கியிருந்தார்.

அப்படம் பெரும் வெற்றி பெற்ற நிலையில், அதன் பிறகு சார்பட்டா 2 படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. மேலும் பா. ரஞ்சித் மற்றும் ஆர்யா இருவரும் சார்பட்டா 2 படத்தின் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளும் துவங்கி, நடைபெற்று வந்தது. ஆனால், தற்போது இப்படம் கைவிடப்பட்டுள்ளதாக தகவல் உலா வருகிறது.

சார்பட்டா 2 படத்தை பிரம்மாண்டமாக ரூ. 80 கோடி பட்ஜெட்டில் எடுக்க வேண்டும் என முடிவு செய்துள்ளார் பா. ரஞ்சித். மொத்தம் மூன்று தயாரிப்பாளர்கள் இணைந்தனர். இதில் ஜீ நிறுவனமும் ஒன்று. ஆனால், ஜீ நிறுவனம் தற்போது விலகிவிட்டார்களாம். பட்ஜெட்டில் இவ்வளவு கோடியை இப்போது இப்படத்தில் முதலீடு செய்ய முடியாது, அது கஷ்டம் என கூறி வெளியேறிவிட்டார்களாம். இதன்பின்தான் இப்படம் கைவிடப்பட்டுள்ளது என்கிற தகவல் பரவத் தொடங்கியுள்ளது.

ஆனால், ஜீ நிறுவனத்திற்கு பதிலாக வேறொரு தயாரிப்பு நிறுவனம் வரும். அதன்பின் படம் கண்டிப்பாகத் தொடங்கும், நிச்சயமாக சார்பட்டா 2 கைவிடப்படாது என்றும் கூறப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS