அலோர் காஜா, மார்ச்.20-
தமது மாணவியான பத்து வயது சிறுமியை அடித்து முடியைப் பிடித்து இழுத்த ஆசிரியர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அச்சம்பவம் மலாக்கா, அலோர் காஜாவில் நிகழ்ந்துள்ளது.
அந்த ஆசிரியரின் செயலால் சம்பந்தப்பட்ட மாணவி, மோசமான அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாமல் இருப்பதாகவும் அச்சிறுமி மலாக்கா மருத்துவமனையின் சிறார் நலப் பிரிவின் கவனத்தில் விடப்பட்டிருப்பதாகவும் தகவல் கூறுகிறது.
அச்சம்பவம் வகுப்பறையில் நிகழ்ந்தாகவும் அம்மாணவி பள்ளிச் செல்லவே அஞ்சுவதாகவும் அறியப்படுகிறது. சில தினங்களுக்கு முன் அச்சிறுமி தனது தாயாரிடம் அச்சம்பவத்தைப் பற்றிக்கு கூற அவ்விஷயம் அம்பலமாகியுள்ளது.