செர்டாங், மார்ச்.20-
டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான நபர், முதல் சந்திப்பின் போது கொள்ளையடிக்கப்பட்டுத் தாக்கப்பட்டார். ஸ்ரீ கெம்பாங்கானில் உள்ள ஒரு வீட்டில் நடந்த இச்சம்பவத்தில், 41 வயது முடி அலங்கார நிபுணரைப் பாதிக்கப்பட்டவரின் கைகளையும் கால்களையும் கட்டி, 67 ஆயிரம் ரிங்கிட் பணத்தைப் பறித்துள்ளனர். இந்தக் கொள்ளை தொடர்பில், 18 முதல் 22 வயது வரை உள்ள தனியார் உயர்கல்வி நிறுவன மாணவர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக செர்டாங் மாவட்டக் காவல் துறைத் தலைவர் அசிஸ்டன் கமிஷனர் ஏ.ஏ அன்பழகன் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் ஒரே பாலின உறவுகளில் ஆர்வமுள்ள ஆண்களைக் குறி வைத்து இந்த கும்பல் செயல்படுகின்றது. சந்தேக நபர்களால் முடிவு செய்யப்பட்ட இடத்தில் சந்திப்பதும், பின்னர் அவர்களைக் கட்டிப் போட்டுப் பணத்தை மாற்றுவதும் சந்தேக நபர்களின் செயல்பாட்டு முறை. எனவே, இது போன்று பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து காவல் துறையைத் தொடர்பு கொண்டு தகவல் அளிக்குமாறு அன்பழகன் கேட்டுக் கொண்டுள்ளார்.