சமையல் எண்ணெய் விலை கட்டுப்பாட்டுத் திட்டம்: இந்த ஆண்டு சோதனை முறையில் தொடங்கப்படும்

கோலாலம்பூர், மார்ச்.20-

அரசாங்க உதவித் தொகை பெற்ற சமையல் எண்ணெய் விற்பனையை ஒழுங்குபடுத்த சமையல் எண்ணெய் விலை கட்டுப்பாட்டுத் திட்டம் இந்த ஆண்டு சோதனை முறையில் தொடங்கப்படும். சில்லறை விற்பனையில் மக்களுக்கு விற்பனை கண்காணிக்கப்படும். QR குறியீடு அல்லது வேறு முறைகள் மூலம் பயனர்கள் சமையல் எண்ணெயை வாங்கலாம். இதன் மூலம் வெளிநாட்டினர் மானிய விலையில் சமையல் எண்ணெயை வாங்க முடியாது எனத் தெரிவித்தார் உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சர் புஃசியா சாலே.

மானிய விலையில் சமையல் எண்ணெயைப் பதுக்குதலையும் முறைகேடு செய்வதையும் தடுக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ரஹ்மா விற்பனை திட்டத்தில் சமையல் எண்ணெயின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பயனரும் மூன்று பாக்கெட்டுகள் வரை வாங்கலாம். சமையல் எண்ணெய் தொடர்பாக இந்த ஆண்டு மார்ச் 18 வரை 605 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 3,655 கிலோ சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS