கோலாலம்பூர், மார்ச்.20-
ஷவ்வால் பிறை பார்க்கும் தேதி மார்ச் 30 ஆம் தேதியாகும். இரமலான் 29 ஆம் நாளன்று மாலையில் நாடு முழுவதும் 29 இடங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியாளர்களின் ஒப்புதலுக்குப் பிறகு பேரரசர் சுல்தான் இப்ராஹிம் இந்த உத்தரவை வெளியிட்டதாக ஆட்சியாளர்களின் அதிகாரப்பூர்வ முத்திரைக் காப்பாளரின் அலுவலகம் கூறியுள்ளது.