கோலாலம்பூர், மார்ச்.20-
தேசிய விளையாட்டு மன்றத்தின் புதிய தலைமை இயக்குனராக ஜெப்ஃரி ஙாடிரின் நியமிக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 3 ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறும் அப்துல் ரஷிட் யாக்கோப்பின் இடத்தை அவர் நிரப்புகிறார். எம்எஸ்என் அதனை அறிவித்துள்ளது.
10வது எம்எஸ்என் தலைமை இயக்குனராக ஜெஃப்ரியின் நியமனம் 4 ஏப்ரல் 2025 முதல் அமலுக்கு வரும். இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா யோ தலைமையில் நடைபெற்ற எம்எஸ்என் வாரியக் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
52 வயதான ஜெஃப்ரி, 1993 இல் மேம்பாட்டுப் பிரிவில் அதிகாரியாக எம்எஸ்என்னில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்ற அவர் MSNனில் 1999 ஆம் ஆண்டு மீண்டும் இணைந்தார். MSN உடனான இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான சேவையில், ஜெஃப்ரி அடிப்படை விளையாட்டுப் பிரிவின் தலைவர், நம்பிக்கை நட்சத்திரப் பிரிவு தலைவர் மற்றும் தடகளப் பிரிவின் இயக்குநர் உட்பட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
2024 ஜனவரி 8 ஆம் தேதி அவர் விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவின் துணைத் தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.