5 இந்தியப் பிரஜைகளுக்கு 30 ஆண்டு சிறைத் தண்டனை

புத்ராஜெயா, மார்ச்.20-

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, நெகிரி செம்பிலான், ரந்தாவில் உள்ள ஒரு தோட்டத்தில் போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக மரணத் தண்டனை விதிக்கப்பட்ட 5 இந்தியப் பிரஜைகளுக்கு, அத்தண்டனை 30 ஆண்டு சிறைத் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.

ராதாகிருஷ்ணன் ஷாம், பஃஸ்ரில் பாஃருக், சைனுலாம்டின் சியாட், அப்துல் கலாம் சஜீவ் மற்றும் சலிம் சபீர் ஆகிய அந்த ஐந்து இந்தியப் பிரஜைகளுக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனை தொடர்பான மேல்முறையீட்டில் தகுதிபாடுயில்லை என்று மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிபதி அஹ்மாட் ஸைடி இப்ராஹிம் தெரிவித்தார்.

எனினும் அவர்களுக்கு எதிரான மரணத் தண்டனையை 30 ஆண்டு சிறை மற்றும் தலா 12 பிரம்படித் தண்டனை என்று மாற்றப்படுவதாக அஹ்மாட் சைடி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS