ஆயர் கூனிங் இடைத் தேர்தல் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்

அலோர் ஸ்டார், மார்ச்.20-

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பேரா, ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பாஸ் கட்சி நம்புவதாக அதன் தேர்தல் இயக்குநரும், கெடா மந்திரி பெசாருமான டத்தோஸ்ரீ முகமட் சனூசி நோர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

ஆயர் கூனிங் தொகுதியைக் கைப்பற்றுவதற்கு பாஸ் கட்சி, இதற்கு முன்பு மேற்கொண்ட முயற்சியில் தோல்விக் கண்ட போதிலும், மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த கட்சி முயற்சிக்கிறது. அதற்கு, ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதியில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழல், இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தாங்கள் நம்புவதாக சனூசி குறிப்பிட்டார்.

மேலும் இடைத் தேர்தலின் வெற்றியானது, போட்டியிடும் கட்சிகளின் வியூகத்தை மட்டும் சார்ந்து இருக்கவில்லை. நடப்பு அரசியல் சூழல் உட்பட இதர விவகாரங்களும் வெற்றிக்கான திறவுக்கோலாக உள்ளது என்று சனூசி தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS