ஜகார்த்தா, மார்ச்.21-
இந்தோனேசியாவின் Mount Lewotobi Laki –Laki (மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி ) எரிமலையின் பயங்கர சீற்றம் காரணமாக பாலியிலிருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்று வெள்ளிக்கிழமை காலையில் பாலி தீவிலிருந்து புறப்பட வேண்டிய 7 அனைத்துலக விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் விமானப் பயணிகள் பெரும் சிரமங்களக்கு ஆளாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேயோ, East Nusa Tenggaraவில் உள்ள Mount Lewotobi Laki –Laki எரிமலை, பாலியில் இருந்து 1,795 மீட்டர் தொலைவில் உள்ளது. கடந்த சில தினங்களாக எரிமலை குமுறிய வண்ணம் இருப்பததால் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் இதற்கு முன்னர் கூறினர்.