பெட்டாலிங் ஜெயா, மார்ச்.21-
குறைந்த வருமானம் மற்றும் வசதி குறைந்தவர்களுக்கு அரசாங்கம் வழங்கி வரும் சும்பாஙான் ரஹ்மா ரொக்கத் தொகை, வரும் மார்ச் 24 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இரண்டாம் கட்டத்திற்கான ரஹ்மா ரொக்க உதவித் தொகையை நாடு முழுவதும் 90 லட்சம் மக்கள் பெறவிருக்கின்றனர். இந்த தொகையைப் பெறுகின்றன மக்களில் 60 விழுக்காட்டினர், பெரியவர்கள் ஆவார்.
ரஹ்மா ரொக்க உதவித் தொகை வழி ஒவ்வொருக்கும் தலா 650 ரிங்கிட் வரை வழங்கப்படுகிறது நோன்பு பெருநாள் கொண்டாட்டம், நெருங்கி வரும் வேளையில் மடானி அரசாங்கத்தின் இந்த உதவித் தொகை அவர்களின் சிரமங்களைக் குறைக்க வல்லதாக இருக்கும் என்று நிதி அமைச்சு நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.