சூப்பர் பைக் அதிவேக மோட்டார் சைக்கிள் பராமரிப்பு பயிற்சித் திட்டம்

ஸ்கூடாய், மார்ச்.21-

ஜோகூர், இஸ்கண்டார் புத்ரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட் ஸ்கூடாயில் கடந்த மார்ச் 15 ஆம் தேதி முதல் 19 வரை வரை அதிவே மோட்டார் சைக்கிள்களான MISI ( மிசி) சூப்பர் பைப் பராமரிப்பு பயிற்சித் திட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

மலேசிய இந்தியர்கள் திறன் முன்னெடுப்புத் திட்டமான MISI- யின் மூலம் நடத்தப்பட்ட இந்த ஐந்து நாள் பயிற்சித் திட்டத்தின் இறுதி நாளன்று, ஸ்கூடாய் சட்டமன்ற உறுப்பினர் மரினா இப்ராஹிமின் சிறப்பு அதிகாரி பௌஃசியா அதிகாரப்பூர்வமான நிறைவு செய்து வைத்தார்.

இந்நிகழ்வில் இஸ்கண்டார் புத்ரி எம்.பி.யும், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை துணை அமைச்சர் லியூ சின் தொங்கின் இந்திய விவகாரங்களுக்கான அதிகாரி மோகன் இராமசாமி, ஜோகூர்பாரு எம்.பி.யும், எரிசக்தி மாற்றம் மற்றும் பொது பயன்பாட்டுத்துறை துணை அமைச்சரமான அக்மால் நாசீரின் இந்திய விவகாரங்களுக்கான அதிகாரி டத்தோ சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

MISI-யின் இந்த திட்டமானது, பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சூப்பர் பைக் பராமரிப்பு முறை, உபரிப் பாகங்களை நேரடியாக அசெம்பிள் செய்தல் மற்றும் சூப்பர் பைக் பராமரிப்பு கருவிகள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றின் அடிப்படை அத்தியாவசிய திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்கியது.

இந்த தொழில்நுட்ப திறன்களுடன் பங்கேற்பாளர்களை வளப்படுத்துவது மூலம், சமூகத்திற்குள் தொழில் வாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS