மூவார், மார்ச்.21-
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பயிற்சி பட்டறையின் போது ஒன்பது மாணவர்களைப் பாலியல் சேட்டை செய்ததாக பணி ஓய்வு பெற்ற முதியவர் ஒருவர், மூவார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
65 வயது லான் சைரான் என்ற நபர் நீதிபதி நரிமான் பாட்ருடின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் ஜோகூர், குளுவாங்கில் உள்ள ஒரு பள்ளியில் பயிற்சிப் பட்டறைக்கு தலைமையேற்று இருந்து அந்த முதியவர், ஒன்பது மாணவர்களிடம் பாலியல் சேட்டைப் புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.