சிப்பாங், மார்ச்.21-
நோன்புப் பெருநாளை முன்னிட்டு அரசாங்க ஊழியர்களுக்கு சிறப்பு உதவித் தொகையாக தலா 500 ரிங்கிட் வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்துள்ளார்.
இந்த 500 ரிங்கிட் சிறப்பு உதவித் தொகை, அடுத்த வாரம் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
பொதுச் சேவைத்துறையில் தங்களை பிணைத்துக் கொண்டுள்ள அரசாங்க ஊழியர்களின் பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில் நோன்புப் பெருநாளுக்குத் தயாராகும் வகையில் இந்த உதவித் தொகை வழங்கப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
பணி ஓய்வு பெற்ற அரசாங்க முன்னாள் ஊழியர்கள் மற்றும் பென்ஷன் திட்டத்தில் இணையாத மூத்த முன்னாள் பணியார்களுக்கு தலா 250 ரிங்கிட் வழங்கப்படும் என்று டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்தார்.