வாஷிங்டன், மார்ச்.21-
தென் அமெரிக்காவின் சில பகுதிகளில், வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக காட்டுத்தீ பரவி வருகிறது. இதனால் டெக்சாஸில் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.
டெக்சாஸில், ஹூஸ்டனுக்கு அருகில் உள்ள தேசிய வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 900 வீடுகளில் வசித்து வரும் மக்களைக் காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
அப்பகுதியில் 3.1 சதுர மைல் பரப்புக்கு காட்டுத்தீ பற்றி எரிந்து முற்றிலும் நாசமாக்கி விட்டது. விலங்குகள், கால்நடைகள் மற்றும் மக்களைப் பாதுகாக்க தீயணைப்பு வீரர்களும் போராடி வருகின்றனர்.
வீடுகளை விட்டு வெளியேற்றப்படும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீயினால் பாதிக்கப்பட்ட 115 ஆண்டுகள் பழமையான செயிண்ட் ஜோசப் கட்டத்தின் கூரை இடிந்து விழுந்தது. டெக்சாஸ் வடக்கு பன்ஹான்டில் முதல் கிழக்கு கடற்கரை வரை காட்டுத்தீயால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.