நெடுஞ்சாலையைக் கடக்க முற்பட்ட சிறுமி லோரியினால் மோதப்பட்டு மரணம்

ஜோகூர் பாரு, மார்ச்.21-

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையைக் கடக்க முற்பட்ட 13 வயது சிறுமி லோரியினால் மோதப்பட்டு பரிதாபமாக மாண்டார்.

இந்த சம்பவம் இன்று காலை 11 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 4.8 ஆவது கிலோ மீட்டரில் ஜோகூர் பாரு அருகில் நிகழ்ந்தது.

கடுமையான காயங்களுக்கு ஆளான அந்த சிறுமி, சம்பவ இடத்திலேயே மாண்டதாக ஜோகூர்பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பல்வீர் சிங் தெரிவித்தார்.

அந்த சிறுமி, நெடுஞ்சாலையில் திடீரென்று நுழைந்ததால் லோரியின் வேகத்தைக் கட்டுப்படுத்த இயலாமல், சிறுமியை மோத வேண்டிய நிலை ஏற்பட்டதாக லோரி ஓட்டுநர் வாக்குமூலம் அளித்து இருப்பதாக பல்வீர் சிங் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS