புத்ராஜெயா, மார்ச்.21-
அரசாங்கக் குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்த அரசாங்கப் பெண் பணியாளரைப் பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு 33 ஆண்டு சிறை மற்றும் 20 பிரம்படித் தண்டனையை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் விதித்தது.
44 வயதுடைய ஹசான் அஹ்மாட் என்ற அந்த நபர், தனக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறை மற்றும் 10 ஆண்டு சிறை ஆகியவற்றை ஏக காலத்தில் அனுபவிப்பதற்கு அனுமதியளிக்கும்படி செய்து கொண்ட மேல்முறையீட்டை மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினர் தள்ளுபடி செய்தனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி காலை 6.30 மணியளவில் பேரா, ஈப்போவில் உள்ள அரசாங்க குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த 40 வயதுடைய அரசாங்கப் பெண் பணியாளரை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக அந்த நபர் மீது இரு குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.