பெட்டாலிங் ஜெயா, மார்ச்.21-
வரும் பொதுத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனலின் பிரதமர் வேட்பாளர் பெயரை இப்போதைக்கு அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று பெர்சத்து கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்ஸா ஸைனுடின் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், பிரதமர் வேட்பாளரை அடையாளம் காண்பதில் பெரிக்காத்தான் நேஷனல் இன்னமும் தடுமாறிக் கொண்டு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை எதிர்க்கட்சித் தலைவருமான ஹம்ஸா ஸைனுடின் வன்மையாக மறுத்தார்.
எனினும் பெரிக்காத்தான் நேஷனல், தனது பிரதமர் வேட்பாளர் பெயரை இப்போதைக்கு அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.