கொலை மிரட்டலுக்கு ஆளாகியுள்ளேன்

கோலாலம்பூர், மார்ச்.21-

தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் வீற்றிருக்கும் நிலம் தொடர்பாக சட்ட அம்சங்களைப் பற்றி தாம் பேசியதற்காக சமூக வலைத்தளம் வாயிலாக தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாக சர்ச்சைக்குரிய சமயப் போதகர் பிஃர்டாவுஸ் வோங் தெரிவித்துள்ளார்.

அந்த ஆலயம் ஒரு தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் வீற்றிருக்கிறது. இந்நிலையில் அந்த நிலத்தை, ஆலய நிர்வாகத்தினர் எவ்வாறு சொந்தம் கொண்டாட முடியும் என்பது குறித்து சட்ட அம்சங்களை மேற்கோள்காட்டி தாம் தெரிவித்துள்ள கருத்துக்களினால் தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக பிஃர்டாவுஸ் வோங் கூறினார்.

இது தொடர்பாக இன்று தாம் போலீசில் புகார் அளிக்கவிருப்பதாக அந்த சர்ச்சைக்குரிய சமயப் போதகர் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS