கோலக் கிள்ளான் துறைமுகத்தில் 33.2 டன் போதைப் பொருள் பறிமுதல்

கோலாலம்பூர், மார்ச்.22-

கோலக் கிள்ளானின் மேற்கு துறைமுகத்தில் 33.2 டன் எடை கொண்ட போதைப் பொருளைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடந்த ஜனவரி 25 ஆம் தேதி இந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப் பொருள் துடைத்தொழிப்புப் பிரிவின் இடைக்கால இயக்குநர் மாட் ஸாய்னி முகமட் சாலாஹூடின் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் மொத்த மதிப்பு 1.062 பில்லியன் ரிங்கிட்டாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாண்டில் நாட்டில் போலீசார் கைப்பற்றிய மிகப் பெரிய அளவிலான போதைப் பொருள் இதுவாகும் என்று அவர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS