கோலாலம்பூர், மார்ச்.22-
மலேசியா ஏர்லைன்ஸ், Firefly, MAS Wings விமானங்களில் பயணம் செய்வோர், வரும் ஏப்ரல் 1 முதல், கையடக்க மின்னூட்டிகளை எல்லா நேரங்களிலும் தங்களுடன் வைத்திருக்க வேண்டும்.
மலேசியா ஏர்லைன்ஸ், அதன் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், விமானங்களில் கையடக்க மின்னூட்டிகளைக் கொண்டு செல்லும் போது, புதுப்பிக்கப்பட்ட கொள்கைக்கு அனைத்துப் பயணிகளும் உட்பட்டு நடக்க வேண்டும் என்றது.
எல்லா நேரங்களிலும் கையடக்க மின்னூட்டிகள் பயணிகளுடன் இருக்க வேண்டும். இருக்கைக்கு மேல் பயணப் பெட்டிகளை வைக்குமிடத்தில் மின்னூட்டிகளை வைக்கக்கூடாது.
விமானப் பயணத்தின்போது, இருக்கைக்குக் கீழ் உங்கள் பயணப் பைகளுக்குள் அல்லது பயணிகளின் முன்னால் உள்ள இருக்கை பாக்கெட்டுக்குள் மின்னூட்டிகளை வைக்கலாம் என மலேசியா ஏர்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது.