புதுப்பிக்கப்பட வேண்டிய அடிக்குமாடி குடியிருப்புகளுக்கு அலுவல் பயணம்

கோலாலம்பூர், மார்ச்.22-

மிகவும் மோசமான நிலையில் உள்ள மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டிய அடிக்குமாடி குடியிருப்புகளுக்கு வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சின் அதிகாரிகள் எதிர்வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி நேரில் மேற்பார்வையிடும் அலுவல் பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறனர்.

குடியிருப்புகளின் நிலவரத்தை நேரில் காண்பதற்கு நாடாளுமன்ற மற்றும் மேலவை உறுப்பினர்கள் குறிப்பாக எதிர்கட்சியைச் சேர்ந்தவர்களையும் தங்கள் தரப்பு அழைக்கவிருப்பதாக அதன் அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.

நாங்கள் நாடாளுமன்றத்தில் இருந்து பேருந்தில் சென்று நான்கு இடங்களைக் காணவுள்ளோம். அவை மோசமான இரண்டு இடங்களும், மேம்படுத்தப்பட்ட இரண்டு இடங்களும் ஆகும். எனவே,மேம்படுத்தப்படுவதற்கு முன்னரும் பின்னரும் அவற்றின் நிலை எப்படி இருந்தன என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் காணலாம் என்று ஙா கோர் மிங் தெரிவித்தார்.

நகர்ப்புற புதுப்பித்தல் சட்ட மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் எதிர்க்கட்சியினர், அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த தவறினால், வீடுகளின் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதை அவர்களை நேரில் அழைத்துச் சென்று காட்டவே இந்த பேருந்து பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஙா கோர் மிங் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS