இஸ்மாயில் சப்ரி வழக்கில் நாணய மாற்றுக்காரர் கைது

புத்ராஜெயா, மார்ச்.22-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சம்பந்தப்பட்ட ஊழல் மற்றும் சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கு தொடர்பில் ஒரு நாணய மாற்றுக்காரரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.

அந்த நாணய மாற்றுக்காரர், நேற்று முன்தினம் கோலாலம்பூரில் உள்ள அவரின் வீட்டில் எஸ்பிஆர்எம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இரண்டு நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு இருந்த அந்த நாணய மாற்றுக்காரர், ஓர் இருதய நோயாளி என்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS