கிள்ளான், மார்ச்.22-
வரும் ஹரிராயா பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் பொருட்டு விரைவு பேருந்துகள் மீது சிலாங்கூர் மாநில சாலை போக்குவரத்து இலாகா தீவிர பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறது.
சாலை போக்குவரத்திற்குத் தகுதியான மற்றும் தரமான விரைவு பேருந்துகள் விளங்கிட வேண்டும் என்ற நோக்கதிற்காக இத்தகையை சோதனையை சிலாங்கூர் ஜேபிஜே தீவிரப்படுத்தி வருகிறது.
விரைவு பேருந்துகளின் டயர்கள், பிரேக் மற்றும் விளக்குகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகின்றனவா? என்பதில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு இந்த பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக சிலாங்கூர் ஜேபிஜேவின் இயக்குநர் அஸ்ரின் போர்ஹான் தெரிவித்தார்.