ஜோகூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

ஜோகூர் பாரு, மார்ச்.22-

ஜோகூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரத்தின்படி வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்தவர்களின் எண்ணிக்கை 13,089 பேராக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை நேற்று 12,686 பேராக இருந்தது என்று மாநில பேரிடர் நிர்வாக நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ளது.

6 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட 3,749 குடும்பங்களைச் சேர்ந்த 13,089 பேர் தற்போது 95 நிவாரண மையங்களில் அடைக்கலம் புகுந்துள்ளதாக அக்குழு அறிவித்துள்ளது.

ஜோகூர் பாரு, குளுவாங், பொந்தியான், கூலாய், கோத்தா திங்கி மற்றும் பத்து பகாட் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS