கோலாலம்பூர், மார்ச்.22-
மலேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் கோலாலம்பூர் – லண்டன் விமானச் சேவை இன்று வழக்க நிலைக்குத் திரும்பியது.
லண்டன், ஹீத்ரோ அனைத்துலக விமான நிலையத்தின் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீச் சம்பவத்க்தைத் தொடர்ந்து அந்த அனைத்துலக விமான நிலையத்திற்கான அனைத்து பன்னாட்டு விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸிற்கு சொந்தமான விமானங்கள், நெதர்லாந்து தலைநகர் Amsterdam Schiphol அனைத்துலக விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டது.
இந்நிலையில் கோலாலம்பூரிலிருந்து லண்டனுக்கான MH4 மற்றும் லண்டனிலிருந்து கோலாலம்பூருக்கான MH1 ஆகிய விமானச் சேவைகள் இன்று வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளதாக மலேசிய ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.