லாஸ் ஆஞ்சல்ஸ், மார்ச்.22-
முன்னாள் கனரக குத்துச் சண்டை வீரர் ஜார்ஜ் போஃர்மேன் காலமானார். அவருக்கு வயது 76. உலக கனரக குத்துச்சண்டை போட்டியில் முடிசூடா மன்னராக விளங்கிய முகமட் அலிக்கு நிகராக கனரக குத்துச் சண்டை கோதாவிற்கு அழகு சேர்ந்த மாபெரும் ஜாம்பான்களில் ஜார்ஜ் போஃர்மேன் முக்கிய இடத்தைப் பெற்றவர் ஆவார்.
அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸிசில் ஜார்ஜ் போஃர்மேன் மரணமுற்றதாக இன்று அதிகாலையில் அறிவிக்கப்பட்டது.
உலக குத்துச் சண்டைப் போட்டியில் 1968 ஆம் ஆண்டில் தனது 21 ஆவது வயதில் ஜார்ஜ் போஃர்மேன் ஹெவி வெயிட் குத்துச் சண்டை சாம்பியன் பட்டத்தை வென்றார்.
70 ஆம் ஆண்டுகளில் முகமட் அலி, ஜார்ஜ் போஃர்மேன், ஜோ பக்னர் கென்னோர்ட்டன் ஆகியோர் கனரக குத்துச் சண்டையில் முன்னணி வீரர்களாக விளங்கினர்.
1974 ஆம் ஆண்டில் முகமட் அலிக்கும், ஜார்ஜ் போஃர்மேனுக்கும் இடையில் அமெரிக்கா, லாஸ் வேகஸில் நடைபெற்ற உலக கனரக குத்துச் சண்டைப் போட்டி, உலகப் பிரசித்தி பெற்றதாகும்.
இந்த குத்துச் சண்டைப் போட்டியில் முகமட் அலியிடம் தோல்வியைத் தழுவிய ஜார்ஜ் போஃர்மேன், தனது பட்டத்தையும் இழந்தார்.
15 சுற்றுக்களைக் கொண்ட இப்போட்டியில் முகமம் அலி, ஜார்ஜ் போஃர்மேனை வீழ்த்தி, முதல் முறையாக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
தொழில் ரீதியிலான குத்துச் சண்டை வீரரான ஜார்ஜ் போஃர்மேன், 1997 ஆம் ஆண்டு கனரக குத்துச் சண்டைப் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.