மலாக்கா தெங்கா, மார்ச்.22
மலாக்கா, டத்தாரான் பாஹ்லாவான் சதுக்கத்தில் நேற்று இரவு 7.15 மணியளவில் மிக ஆவேசமாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் பெண் ஒருவர், மனநோயாளி ஆவார் என்று போலீசார் இன்று உறுதிப்படுத்தினர்.
அந்தப் பெண்ணின் ஆவேசச் செயலுக்கு பிறகு அவர் தடுக்கப்பட்டு, தற்போது மலாக்கா மருத்துமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிரிஸ்டப்பர் பாதிட் தெரிவித்தார்.
பேரங்காடி மையத்திலிருந்து வெளியேறிய மாது மற்றும் அவர்களின் குழந்தைகளையும் விரட்டிக் கொண்டு , கூச்சலிட்டுக் கொண்டும் அந்த பெண் செயல்பட்டது பொது மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.