மாணவனைச் சீனாவிற்கே திரும்பிச் செல்லுமாறு ஆசிரியர் கூறுவதா? கல்வி அமைச்சு விசாரணை

கோலாலம்பூர், மார்ச்.22

இடைநிலைப்பள்ளி ஒன்றில் மலாய் மொழியில் உரையாடுவதில் சிரமத்தை எதிர்நோக்கியிருந்த சீன மாணவன் ஒருவனை, மலேசியாவில் இருந்து போராடுவதை விட சீனாவிற்கே திரும்பிச் செல்லுமாறு கூறியதாகக் கூறப்படும் ஆசிரியர் ஒருவர் தற்போது கல்வி அமைச்சின் விசாரணைக்கு ஆளாகியுள்ளார்.

சம்பந்தப்பட்ட ஆசிரியர், அந்த சீன மாணவனை அவ்வாறு கேட்டுக் கொள்ளும் காட்சியைக் கொண்ட காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இவ்விவகாரம் தற்போது கல்வி அமைச்சின் விசாரணையில் இருந்து வருகிறது.

கற்றல், கற்பித்தல் துறையில் எந்த சூழ்நிலையிலும் இன ரீதியிலான பேச்சுகள் அல்லத் செயல்கள் ஒரு போதும் சகித்துக் கொள்ளப்படாது என்று கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தற்போது கல்வி அமைச்சு அளவிலான விசாரணை நடைபெற்று வரும் வேளையில் சம்பந்தப்பட்ட சீன மாணவனின் பெற்றோரையும் கல்வி அமைச்சு சந்திக்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கற்றல் துறையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், இனத்துவேஷத் தன்மைக்கு உந்தப்படுவார்களேயானால், அவர்களால் எவ்வாறு உளப்பூர்வமான கல்வியை மாணவர்களுக்கு வழங்க முடியும் என்று பலர் கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர்.

WATCH OUR LATEST NEWS