மகள் மீது சுடு தண்ணீரை ஊற்றிய மாது கைது

மலாக்கா, மார்ச்.22-

தனக்குச் சொந்தமான ஒப்பனைப் பொருட்களை எடுத்து, விளையாடிக் கொண்டு இருந்த 10 வயது மகளை அடித்ததுடன் அவர் மீது சுடு தண்ணீர் ஊற்றி ரணப்படுத்தியதாக நம்பப்படும் மாது ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை பள்ளிக்கு வந்திருந்த அந்த பத்து வயது சிறுமி, பள்ளியின் சீருடையை அணியாமல் வழக்கமான ஆடையில் வந்திருப்பதைக் கண்டு ஆசிரியர் வினவியுள்ளார்.

உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக அந்த சிறுமி கூறியதைக் கேட்டு, பெண் ஆசிரியர், அந்த மாணவியைத் தனியறைக்கு கொண்டுச் சென்று, சோதனை செய்துள்ளார். அப்போது அந்த சிறுமியின் உடலில் தீக் காயங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளான ஆசிரியர், அந்த மாணவியை மலாக்கா மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து போலீஸ் புகார் பெற்றப் பின்னர் அந்த சிறுமியின் தாயாரை போலீசார் கைது செய்துள்ளனர் என்று மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ சுக்கைய்ரி முக்தார் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS