மலாக்கா, மார்ச்.22-
மலாக்காவில் உள்ள முன்னணி பேரங்காடி மையத்தில் கடத்தல் சம்பவம் நிகழ்ந்ததைப் போல் நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலான தகவலை போலீஸ் துறை இன்று மறுத்துள்ளது.
இது உண்மையிலேயே 33 வயதுடைய மனம் நலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் சம்பந்தப்பட்டது என்று மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் கிரிஸ்டப்பர் பாதிட் தெரிவித்தார்.
ஒரு குழந்தையுடன் காணப்பட்ட மாது ஒருவரைப் பின் தொடர்ந்து துரத்திக் கொண்டுச் சென்ற மன நலம் பாதிக்கப்பட்ட பெண், ஆவேசமாகக் கத்தி கூச்சலிட்டதைத் தொடர்ந்து, பயந்துப் போன சம்பந்தப்பட்ட மாது, தன் பிள்ளையை தூக்கிக் கொண்டு அங்கிருந்து ஓடினார்.
அப்போது ஆ வேசமாக நடந்து கொண்ட மனம் நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, பேரங்காடியில் உள்ள பாதுகாவலர்கள் மடக்கிப் பிடித்து, கைது செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த காட்சியைப் பதிவு செய்த பொது மக்கள் இது ஏதோ கடத்தல் சம்பவம் போன்று 46 வினாடிகள் ஓடக்கூடிய அந்த காணொளியை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர் என்று கிரிஸ்டப்பர் பாதிட் விளக்கினார்.