ஜார்ஜ்டவுன், மார்ச்.22-
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜசெக தேர்தல் சுமூகமாக நடைபெற்றதைத் தொடர்ந்து கட்சிப் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் இனி 16 ஆவது பொதுத் தேர்தலில் கவனம் செலுத்துவர் என்று மனித வள அமைச்சரும், கட்சியின் புதிய துணை செயலாளருமான ஸ்டீவன் சிம் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில் பினாங்கு மாநிலத்தில் பக்காத்தான் ஹராபான் ஆட்சியைத் தொடர்ந்து உறுதிச் செய்வதற்கு கட்சி கடுமையாகப் பாடுபடும் என்று பினாங்கு மாநில ஜசெக தலைவருமான ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.
தவிர ஜசெக தேர்தலில் பினாங்கு மாநிலப் பிரதிநிதிகளுக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இது நல்லதொரு அறிகுறியாகும் என்று ஸ்டீவன் சிம் வர்ணித்துள்ளார்.