லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் சில விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கின

லண்டன், மார்ச்.22-

லண்டன், ஹீத்ரோ (Heathrow) அனைத்துலக விமான நிலையத்தின் விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளன.
விமான நிலையத்தின் அருகில் உள்ள துணை மின் நிலையத்தில் தீ மூண்டதால் விமான நிலையத்தில் மின்தடை ஏற்பட்டது. இதனால், அந்த அனைத்துலக விமான நிலையம் நேற்று மூடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஹீத்ரோ விமான நிலையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் சுமார் 18 மணி நேரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால், சுமார் 2 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

ஐரோப்பாவின் மற்ற விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்ட விமானச் சேவைகளை ஹீத்ரோ விமான நிலையத்திற்குக் கொண்டுச் சேர்ப்பதில் அதன் நிர்வாகம் தற்போது முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.

WATCH OUR LATEST NEWS