மடக்கு மேஜையில் தலை சிக்கி, 6 வயது சிறுமி பரிதாப மரணம்

நிபோங் தெபால், மார்ச்.22-

வீட்டின் பின்புறம் தனியொரு நபராக விளையாடிக் கொண்டு இருந்த 6 வயது சிறுமி ஒருவர், மடக்கு மேஜையின் இடுக்கில் தலை சிக்கி, பரிதாபமாக மாண்டார்.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 4.15 மணியளவில் பினாங்கு, நிபோங் தெபால், தாமான் ஶ்ரீ புத்ராவில் அந்த சிறுமியின் வீட்டுப் பகுதியின் பின்புறம் நிகழ்ந்தது.

சம்பவம் நிகழும் போது, அந்த சிறுமியின் தாயார், சகோதரி மற்றும் சகோதரன் ஆகியோர் வீட்டிற்குள் இருந்ததாக அறியப்படுகிறது.

வீட்டின் பின்புறம் விளையாடிக் கொண்டு இருந்த சிறுமியின் சத்தம் எதுவும் கேட்காத நிலையில் குடும்ப உறுப்பினர்கள் பின்புறம் சென்று பார்த்த போது ,அந்த சிறுமியின் கழுத்து, மடக்கு நாற்காலியின் இரும்புப் பகுதிக்கு இடையில் சிக்கி, அவர் சுயநினைவு இழந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டார்.

அண்டை வீட்டுக்காரர்களின் உதவியுடன் அந்த சிறுமி, பேரா,பாரிட் புந்தார் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட போது அக்குழந்தை இறந்து விட்டதை மருத்துவர்கள் உறுதிச் செய்தனர்.

WATCH OUR LATEST NEWS