மிக மகிழ்ச்சியான மாவட்டமாக பகாங்கில் தேர்வு, சுல்தான் பெருமிதம்

குவாந்தான், மார்ச்.22-

மலேசியாவில் மக்கள் மிகுந்த சந்தோஷமாக வாழ்ந்து வருகின்ற மகிழ்ச்சிகரமான மாவட்டங்களாக 20 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த 20 இடங்களில் பகாங் மாநிலத்தில் நான்கு மாவட்டங்கள் தேர்வாகியிருப்பது குறித்து மேன்மை தங்கிய பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா இன்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.

லிப்பிஸ், கேமரன் ஹைலண்ட்ஸ், ஜெராண்டூட் மற்றும் தெமர்லோ ஆகிய மாவட்டங்கள் பகாங் மாநிலத்தில் மிக மகிழ்ச்சிக்குரிய இடங்களாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நான்கு மாவட்டங்களில் குறிப்பாக லிப்பிஸ், மகிழ்ச்சிகரமான மாவட்டமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது மிகப் பொருத்தமானதாகும் என்று சுல்தான் அப்துல்லா பெருமிதம் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS