சுபாங் ஜெயா, மார்ச்.22-
சுபாங் ஜெயாவில் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர், நூலகத்தில், மடிக்கணினியின் முன் அமர்ந்து கொண்டு, ஆபாச சேட்டையில் ஈடுபட்டது தொடர்பான காணொளி, சமூக வலைத்தளத்தில் வைரலானதைத் தொடர்ந்து அந்த மாணவன் குறித்து போலீசார் விசாரணை செய்யத் தொடங்கியுள்ளது.
அந்த மாணவர் சம்பந்தப்பட்ட இரண்டு காணொளிகள் தொடர்பில் போலீசார் நேற்று இரவு, பொது மக்களிடமிருந்து புகார்களை பெற்று இருப்பதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்துள்ளார்.
இன்னும் அந்த மாணவனிடம் போலீசார் விசாரணை நடத்தவில்லை. விசாரணைக்கு ஏதுவாக அந்த மாணவனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரும்படி சம்பந்தப்பட்ட குடும்பத்தினரைத் தாங்கள் கேட்டுக் கொள்வதாக வான் அஸ்லான் குறிப்பிட்டார்.