ஜோகூர் பாரு, மார்ச்.22-
ஜோகூர் மாநிலத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரண உதவியாக ரொக்கத் தொகையை வழங்குவதற்கு மாநில அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
பாதிக்கப்பட்ட 3,749 குடும்பங்களுக்கு தலா மூவாயிரம் ரிங்கிட் உதவித் தொகையாக வழங்கப்படும் என்று ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாபிஃஸ் காஸி தெரிவித்தார்.
தற்காலிக நிவாரண மையங்களில் தங்கி, தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொண்டவர்களுக்கு இந்த நிதி உதவி வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்காக 11 மில்லியன் ரிங்கிட்டை மாநில அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக ஓன் ஹாபிஃஸ் தெரிவித்தார்.