கோலாலம்பூர், மார்ச்.22-
புஸ்பாகோம் பரிசோதனையில், வாகனங்கள் காத்திருக்க வேண்டிய வரிசை எண்களை விற்பனை செய்தது தொடர்பில் மேலும் ஒரு ஏஜெண்டை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.
வரிசை எண்களைப் பின்பற்றாமல், குறுக்கு வழியில் வாகனங்கள் முந்திச் சென்று விரைவாக பரிசோதனையில் உட்படுபடுவதற்கு ஏதுவாக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க, அந்த தொகையை வாகனங்களின் உரிமையாளர்களிடமிருந்து இக்கும்பல் பெற்று வந்ததாக நம்பப்படுகிறது.
ஆகக் கடைசியாக பிடிபட்ட நபர், இன்று புத்ராஜெயாவில் நிறுத்தப்பட்டு, 4 நாள் தடுப்புக் காவலில் வைப்பதற்கான அனுமதியை எஸ்பிஆர்எம் இன்று பெற்றுள்ளது.