கோலாலம்பூர், மார்ச்.22-
சமூக வலைத்தளங்களின் வாயிலாக தங்களுக்கு கிடைக்கப் பெறும் ஒரு தகவலை, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு முன்னதாக அதன் உள்ளடக்கத்தில் உண்மைத்தன்மையை உறுதிச் செய்யுமாறு சமூக வலைத்தள பயனர்களை தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ பாஃமி பாஃட்சீல் கேட்டுக் கொண்டார்.
ஆர்வ மிகுதியால் உந்தப்பட்டு, அந்த தகவலைப் பதிவேற்றம் செய்வதற்கு துடிப்பதற்கு முன்னதாக அதில் பொதிந்துள்ள உண்மையைக் கண்டறிவது அவசிமாகும் என்று டத்தோ பாஃமி வலியுறுத்தினார்.
சமூக வலைத்தளங்களில் பெறப்படும் தகவல்களில் மிகுந்த எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். தேவையில்லாத வில்லங்கத்தில் சிக்கிக் கொள்வதைக் காட்டிலும் உள்ளடக்கத்தின் உண்மைத் தன்மையை ஆராய்வது மிக முக்கியம் என்பதை அமைச்சர் வலியுறுத்தினார்.